Enable Javscript for better performance
பணி நிறைவு பாராட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.புகழேந்திக்கு  பாராட்டு விழா நடைபெற்றது.

    கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, முதல்வர் ஜெயந்தி தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் குப்புராஜ், குடியிருப்பு மருத்துவ அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷா கல்யாணி வரவேற்றார்.

    மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, மருத்துவக் கல்லூரி மயக்கவியல் மருத்துவர் ஸ்ரீதர் மற்றும் மருத்துவர்கள், பணி நிறைவு பெற்ற எஸ்.எஸ்.புகழேந்தியின் சேவையை பாராட்டிப் பேசினர். தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ - மாணவிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள், உள்ளூர் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு எஸ்.எஸ்.புகழேந்திக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகம் சார்பில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai