Enable Javscript for better performance
போளூரில் பாஜக ஒன்றிய செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    போளூரில் பாஜக ஒன்றியச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயவேல், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கந்தன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசி தேவதாஸ், மாவட்ட மகளிரணித் தலைவி அலமேலு, மாவட்டச் செயலர் கவிதா ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், போளூர் ஏரிக்கு வரும் கால்வாய்களை தூர்வார வேண்டும், செங்குணம், அத்திமூர் பகுதிகளுக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாவட்டப் பொதுச்செயலர் என்.வெங்கடேசன், ஒன்றிய பொதுச்செயலர் அன்பழகன், நகரத் தலைவர் ரமேஷ் உள்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai