Enable Javscript for better performance
மாமியார், மருமகளுக்கு மிரட்டல்: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மாமியார், மருமகளுக்கு மிரட்டல்: இளைஞர் கைது

    By திருவண்ணாமலை  |   Published on : 03rd August 2016 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அருகே மாமியார், மருமகளை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

    திருவண்ணாமலையை அடுத்த பழைய மல்லவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தன் (60). இதே பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (45). இவர்களுக்கு இடையே விவசாய நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறதாம்.

    இந்நிலையில், கடந்த ஜூலை 30-ஆம் தேதி கோவிந்தன் மருமகள் கல்யாணி வீட்டுக்கு எதிரே தண்ணீர் ஊற்றினாராம். இதைப் பார்த்த நாராயணன், அவரது உறவினர் ஏழுமலை (28) ஆகியோர், ஏன் நாங்கள் வரும்போது தண்ணீர் ஊற்றுகிறாய் என்று கேட்டு தகராறு செய்தனராம்.

    இதை கோவிந்தன் மனைவி ரேணு தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த நாராயணன், ஏழுமலை ஆகியோர் சேர்ந்து கல்யாணி, ரேணு ஆகியோரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து ஏழுமலையை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நாராயணனை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai