Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை நேர தர்னா போராட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    வந்தவாசி நகரில் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சு.முருகன் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும், மேல்மருவத்தூர், கீழ்க்கொடுங்காலூரிலிருந்து வந்தவாசி நகருக்கு வரும் பேருந்து பயணிகள் அலைக்கழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

    வட்டாரச் செயலர் பெ.அரிதாசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மா.சிவகுமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மு.பிரகலநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாவட்டக்குழு உறுப்பினர் கி.பால்ராஜ் மற்றும் கெ.முனியன், இரா.துரைபாபு, அ.அப்துல்காதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai