Enable Javscript for better performance
வீடு இழந்தவருக்கு திமுக நிவாரணம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே தீ விபத்தில் வீடு இழந்தவரின் குடும்பத்துக்கு திமுக சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.

    திருவண்ணாமலையை அடுத்த பாவுப்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட எலிகுத்தி கிராமத்தைச் சேர்ந்த ந.ஏழுமலை என்பவரது வீடு அண்மையில் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது.

    இந்நிலையில், வீட்டை இழந்த ஏழுமலை குடும்பத்துக்கு மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு, தனது சொந்தப் பணம் ரூ.5 ஆயிரம், இலவச அரிசி, புடவை, வேட்டி ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினார்.

    நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட அமைப்பாளர் சேஷா.திருவேங்கடம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai