Enable Javscript for better performance
அருந்ததி இன மக்கள் நலன் காக்க புதிய அமைப்பை ஏற்படுத்த முடிவு- Dinamani

சுடச்சுட

    

    அருந்ததி இன மக்கள் நலன் காக்க புதிய அமைப்பை ஏற்படுத்த முடிவு

    By திருவண்ணாமலை  |   Published on : 04th August 2016 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருந்ததியின மக்களின் நலன் காக்க புதிய அமைப்பை ஏற்படுத்துவதென கலைக்கப்பட்ட அருந்ததி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அருந்ததி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் வலசை ரவிச்சந்திரன், கட்சியை கலைத்துவிட்டு நிர்வாகிகளுடன் அண்மையில் அதிமுகவில் இணைந்தார். இதில் உடன்பாடு இல்லாத திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

    திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் ஜி.சுப்பிரமணி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட இணைச் செயலர் எஸ்.கே.கருணாமூர்த்தி வரவேற்றார்.

    கூட்டத்தில், வரும் 13-ஆம் தேதி திருவண்ணாமலையில் திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்துவது. அருந்ததியின மக்களின் நலனுக்காக புதிய அமைப்பை ஏற்படுத்துவது. அன்றைய தினமே அமைப்பின் பெயர், கொடியை அறிமுகப்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், கட்சியின் முன்னாள் மாவட்டப் பொருளர் எம்.சேட்டு, மாவட்ட இளைஞரணிச் செயலர் சகாதேவன், முன்னாள் ஒன்றியப் பொருளர் கே.ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai