Enable Javscript for better performance
ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் கடைகளுக்கு உரிமம் பெற வேண்டும்: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் கடைகளுக்கு உரிமம் பெற வேண்டும்: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்

    By செங்கம்  |   Published on : 04th August 2016 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் அனைத்து கடைகளுக்கும் உரிமம் பெற வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் செங்கம் நகர வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ராஜா, செங்கம் நகர உணவுப் பாதுகாப்பு அலுவலர் அகிலேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வியாபாரிகளிடம் உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    அவர் பேசுகையில், பலகாரக் கடைகளில் கேக் வகைகளுக்கு போடப்படும் வண்ணப் பொடிகளை குறைக்க வேண்டும். சுத்தமான தண்ணீரில் தின்பண்டங்களை தயாரிக்க வேண்டும். விற்பனை செய்யும் பொருள்களின் மீது தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதியை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

    அனைத்து கடை உரிமையாளர்களும் கடைகளுக்கு முறைபடி உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் பெறாத கடை உரிமையாளர்கள் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்துக்குள் உரிமம் பெற வேண்டும். சரக்கு கொள்முதல் ரசீது, விற்பனை செய்யும் ரசீது போன்றவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதில், வியாபாரிகள் சங்கத் தலைவர் அப்துல்சத்தார் உள்பட செங்கம் நகர வியாபாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai