Enable Javscript for better performance
இலவச தையல் பயிற்சி: வேலைவாய்ப்பற்றோர்  விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    இலவச தையல் பயிற்சி: வேலைவாய்ப்பற்றோர்  விண்ணப்பிக்கலாம்

    By திருவண்ணாமலை  |   Published on : 04th August 2016 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் மகளிர்  இலவச தையல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மைக் குழு இணைந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் மகளிருக்கு குறுகிய கால தையல் பயிற்சியை அளிக்க திட்டமிட்டுள்ளது.

    உயர்கல்வி தொடர முடியாமல் பள்ளிக்கல்வியை இடையில் நிறுத்திய மாணவ - மாணவிகள் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளும் வகையில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை வரவேற்கப்படுகிறது.

    இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் அரசு நிர்ணயித்தவாறு வயது இருக்க வேண்டும். இந்தப் பயிற்சியில் சேர கட்டணம் ஏதும் இல்லை. 3 மாதம் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு வந்து செல்ல போக்குவரத்துக் கட்டணம் வழங்கப்படும்.

    பயிற்சி முடிவில் தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழைப் பயன்படுத்தி சுயதொழில் செய்யலாம். ஆகஸ்ட் 22-ஆம் தேதி பயிற்சிகள் தொடங்கப்படுகின்றன.

    இது குறித்த மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை 04175-233018 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சா.பழனி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai