Enable Javscript for better performance
சாராய வழக்கில் பறிமுதல் செய்த 25 வாகனங்கள் இன்று ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    சாராய வழக்கில் பறிமுதல் செய்த 25 வாகனங்கள் இன்று ஏலம்

    By திருவண்ணாமலை  |   Published on : 04th August 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 25 வாகனங்கள் வியாழக்கிழமை ஏலம் விடப்படுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களில் சாராயம், எரிசாராயம், மது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 25 இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் வியாழக்கிழமை ஏலம் விடப்படுகின்றன.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காலை 10 மணிக்கு வாகனங்கள் ஏலம் நடைபெறுகிறது. ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவோர், நுழைவுக் கட்டணமாக ரூ.100, முன் பணமாக ரூ.1,000 செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டு ஏலத்தில் கலந்துகொள்ளலாம்.

    வியாழக்கிழமை காலை 10 மணி வரை ரசீது வழங்கப்படும். வாகனங்களை ஏலம் எடுக்காதவர்கள் செலுத்திய முன் பணம் திரும்ப அளிக்கப்படும். ஏலம் எடுத்தவர்கள், ஏலத் தொகையுடன் 14 சதவீத விற்பனை வரி, அந்த விற்பனை வரிக்கு 5 சதவீத சேவை வரி சேர்த்து செலுத்த வேண்டும்.

    பதிவு எண், என்ஜின் எண், சேசிஸ் எண் இல்லாத வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மறுபதிவு செய்ய இயலாது. ஏலம் எடுத்த வாகனத்துக்கு உண்டான ரசீது மட்டுமே வாகனத்தின் உரிமை ஆவணமாகும்.

    மேலும் விவரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திருவண்ணாமலை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04175-233920 என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai