Enable Javscript for better performance
சாலை ஆக்கிரமிப்பு: வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    சாலை ஆக்கிரமிப்பு: வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

    By ஆரணி  |   Published on : 04th August 2016 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணியை அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பள்ளி மாணவர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தை புதன்கிழமை மண்ணெண்ணெய் கேனுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மலையாம்பட்டு கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சாலையை அந்தப் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியினர் அவரவர் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனராம்.

    இது குறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

    இந்நிலையில், அந்தப் பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்யப்போவதாகக் கூறி மண்ணெண்ணெய் கேனுடன் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் தமிழ்மணி அவர்களை சமரசம் செய்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட சாலையை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து போக்குவரத்து வசதி செய்யப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

    அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். தகவலறிந்த ஆரணி நகர போலீஸார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai