Enable Javscript for better performance
போளூர் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் நாளை சிறப்பு மேளா- Dinamani

சுடச்சுட

    

    போளூர் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் நாளை சிறப்பு மேளா

    By போளூர்  |   Published on : 04th August 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைக்கும் திட்டத்தின் கீழ் மானியம் பெற விவசாயிகள் போளூர் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெறும் சிறப்பு மேளாவில் மனு அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து போளூர் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

    மத்திய அரசின் சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் அமைக்கும் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் (5 ஏக்கர் வரை), பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் (12.5 ஏக்கர் வரை) வழங்கப்படுகிறது.

    மேலும், 2014-15 மற்றும் 2015-16ஆம் ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் பகுதி செலவிடப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிதியை முழுமையாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன விவசாயிகள் பெற்று பயனடையலாம்.

    மேலும், 2016-17ஆம் ஆண்டுக்கான திட்டத்தின்கீழ், அனைத்து தரப்பு விவசாயிகளும் மானிய விண்ணப்பம், சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு விவசாயி சான்று, மண் மற்றும் தண்ணீர் பரிசோதனை சான்று ஆகியவற்றை சமர்ப்பித்து மானியத்தை பெறலாம்.

    சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் அமைக்கும் திட்டத்தில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்கப்படுவதால், விவசாயிகள் போளூர் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு மேளாவில் கலந்துகொண்டு மானியம் பெற தேவையான தங்களின் வருவாய் துறை ஆவணங்களை அளித்து பதிவேட்டில் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai