Enable Javscript for better performance
4 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் இடமாறுதல்- Dinamani

சுடச்சுட

    

    4 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் இடமாறுதல்

    By திருவண்ணாமலை  |   Published on : 04th August 2016 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட கல்வித் துறையில் பணிபுரிந்து வந்த 4 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் வேறு ஒன்றியங்களுக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர்.

    2016-17ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பணி நிரவல், பணி மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கியது.

    திருவண்ணாமலையில் தனியார் பள்ளியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் இந்த பொதுமாறுதல் கலந்தாய்வு தொடங்கியது.

    முதல் நாளான புதன்கிழமை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு (இணையதளம் வாயிலாக) நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் 16 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 4 பேர் மட்டும் இடமாறுதல் பெற்றனர்.

    4 பேர் விவரம்: அதன்படி, வந்தவாசி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பரமசிவம், தருமபுரி மாவட்டம், அரூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக இடமாறுதல் பெற்றார்.

    திருவண்ணாமலை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சிவக்குமார், கீழ்பென்னாத்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் துரைக்கண்ணு ஆகியோர் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களாக மாறுதல் பெற்றனர்.

    போளூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அறிவழகன், வெம்பாக்கம் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக மாறுதல் பெற்றார்.

    இதேபோல, தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 4 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாறுதல் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    கலந்தாய்வில் இன்று...

    கலந்தாய்வின் 2-ஆம் நாளான வியாழக்கிழமை நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு (இணையதளம் வாயிலாக) நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai