Enable Javscript for better performance
இன்னிசைக் கச்சேரி நடத்த அனுமதிக்க வேண்டும்: மெல்லிசைப் பாடகர்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    இன்னிசைக் கச்சேரி நடத்த அனுமதிக்க வேண்டும்: மெல்லிசைப் பாடகர்கள் கோரிக்கை

    By திருவண்ணாமலை  |   Published on : 05th August 2016 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கோயில் திருவிழா, பொது நிகழ்ச்சிகளில் இன்னிசை கச்சேரி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மேடை மெல்லிசை பாடகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தின் சில இடங்களில் அண்மையில் நடைபெற்ற இன்னிசைக் கச்சேரிகளில் இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இன்னிசைக் கச்சேரிகள் நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி தடை விதித்துள்ளார்.

    இதனால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மேடை மெல்லிசை பாடகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்தின் தென்னிந்திய தலைவர் அசோக்குமார், மாவட்டத் தலைவர் வி.கோபு, மாவட்டச் செயலர் டி.சிவபிரகாஷ் ஆகியோர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம் மனு ஒன்றை அளித்தனர்.

    அதில், மாவட்டத்தில் ஒலி, ஒளி அமைப்பு, மேடை அலங்காரம், இன்னிசை பாடகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என இசை நிகழ்ச்சி நடத்தும் குழுக்களில் 3 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். மாவட்டத்தில் ஆரணி, வந்தவாசி பகுதிகளில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், 3 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    எனவே, சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai