Enable Javscript for better performance
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

    By செய்யாறு  |   Published on : 05th August 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பா.கோகிலா தலைமை வகித்தார். அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெனார்த்தனி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், குழந்தைகளின் அடிப்படை உரிமைகள், குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் சட்டம், குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்விச் சட்டம், குழந்தை கடத்தல், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல், குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோரின் பங்கு, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் இலவச தொலைபேசி எண் 1098 ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில், குழந்தை பாதுகாப்பு அலுவலர் எம்.நாகராஜன், ஆலோசகர் ஆர்.கவிதா, சமூகப் பணியாளர் கே.சுஜாதா,அரசு மருத்துவர் பாலாஜி, ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.கே.கன்னிக்குமார், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் டி.சரளா, ஆர்.பரிமளா, தலைமை ஆசிரியர் கற்பகம், மாவா தொண்டு நிறுவன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும்   அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai