Enable Javscript for better performance
சாலை விபத்தில் தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    வேட்டவலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வேட்டவலத்தை அடுத்த கோணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (40), கூலித் தொழிலாளி. கோணலூர் கிராமம், முனீஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (21). உறவினர்களான இருவரும் புதன்கிழமை மாலை மொபெட்டில் நாடழகானந்தல் கிராமத்துக்குச் சென்றுகொண்டிருந்தனர்.

    நாடழகானந்தல் கூட்டுச் சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரில் மொபெட் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பலத்த காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர், தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரவி மாற்றப்பட்டார். எனினும், அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, வேட்டவலம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai