Enable Javscript for better performance
செங்கத்தில் பள்ளி கட்டடத்தை திறந்து வைத்து சுவாமி கௌதமானந்தர் மகராஜ் ஆசியுரை- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தில் பள்ளி கட்டடத்தை திறந்து வைத்து சுவாமி கௌதமானந்தர் மகராஜ் ஆசியுரை

    By செங்கம்  |   Published on : 05th August 2016 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் புதிய கூடுதல் கட்டடத்தை சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தர் மகராஜ் குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார்.

    செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்துக்கு வந்த சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தர் மகராஜ் பக்தர்களுக்கு புதன்கிழமை மந்திர தீட்சை (மந்திர உபதேசம்) வழங்கினார். தொடர்ந்து, வியாழக்கிழமை செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் மாணவர்களுக்கான சிறுவர்கள் விளையாட்டு பூங்காவை திறந்துவைத்து, அங்குள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

    பின்னர், ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் புதிய கூடுதல் கட்டடத்தை (நிவேதிதா பிளாக்) குத்துவிளக்கேற்றி திறந்துவைத்து, ஆசிரியர்கள், பக்தர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆசியுரை வழங்கிப் பேசினார்.

    அப்போது, நாட்றம்பள்ளி ஆஸ்ரமத் தலைவர் சுவாமி தியாகாராஜானந்தர், சென்னை ஆஸ்ரமத்தின் செயலர் சுவாமி ஆத்மக்த்ஞானந்தர் மகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா அறக்கட்டளைத் தலைவர் பாண்டுரங்கன், செயலர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில், செங்கம் சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை, ஸ்ரீ சாரதாதேவி அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai