Enable Javscript for better performance
திருவண்ணாமலை ஒன்றியக் குழுக் கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை ஒன்றியக் குழுக் கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    By திருவண்ணாமலை  |   Published on : 05th August 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, ஒன்றியகுழுத் தலைவர் அமுதா குமாரசாமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெ.சிவக்குமார், மு.சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ராஜேஸ்வரி சண்முகம் வரவேற்றார்.

    கூட்டத்தில் தென்மாத்தூர் ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.கலியபெருமாள் பேசுகையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவண்ணாமலை ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.

    இதேபோல, பெரும்பான்மையான அதிமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்று கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றினோம். இதற்கான வாய்ப்பை அளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அப்போதைய உணவுத் துறை அமைச்சரும், மாவட்டச் செயலருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, 5 ஆண்டுகள் ஒன்றியக்குழுவை சிறப்பாக வழி நடத்திய ஒன்றியக்குழுத் தலைவர் அமுதா குமாரசாமி ஆகியோருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் சார்பில் தீர்மானம் கொண்டு வருகிறோம் என்றார்.

    இந்த தீர்மானத்துடன், உடையானந்தல், காட்டாம்பூண்டி, மலப்பாம்பாடி, தேவனூர், கனந்தம்பூண்டி ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட கோ-கோ சங்கத் தலைவர் ஏ.கே.குமாரசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.இனியன், கே.மரியதேவ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரவி, ராமு, வீரமணி, சண்முகம், பழனி, அருணாச்சலம், ஜி.பழனி, கே.பழனி, பொம்மி வாசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai