Enable Javscript for better performance
நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 6 பேர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல்- Dinamani

சுடச்சுட

    

    நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 6 பேர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல்

    By திருவண்ணாமலை  |   Published on : 05th August 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட கல்வித் துறையில் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்த 6 பேர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் பெற்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2016-17ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பணி நிரவல், பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கலந்தாய்வின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களாக இருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெற்றது.

    திருவண்ணாமலை டேனிஸ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலந்தாய்வை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் நடத்தினார்.

    இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 14 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் வந்தவாசி வட்டம், அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக இடமாறுதல் பெற்றார்.

    இதேபோல, திருவண்ணாமலை ஒன்றியம், சோ.கீழ்நாச்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.பாஸ்கரன், விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலராக இடமாறுதல் பெற்றார்.

    மேலும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், கானலாபாடி பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ரவி, விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்துக்கும், ஆரணி ஒன்றியம், அரியாப்பாடி பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.செந்தமிழ், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக இடமாறுதல் பெற்றனர்.

    இதேபோல, அனக்காவூர் ஒன்றியம், மேல்நெமிலி பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.கலாவதி, காஞ்சிபுரம் மாவட்டம், லத்தூர் ஒன்றியத்துக்கும், திருவண்ணாமலை கானா நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கே.மோகன், திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக இடமாறுதல் பெற்றனர்.

    ஆக மொத்தம் 6 நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களாக இடமாறுதல் பெற்று வெளிமாவட்டங்களுக்குச் சென்றுள்ளனர்.

    நாளைய கலந்தாய்வு: நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு சனிக்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெறுகிறது.

    மேலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்), பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள்ளான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai