Enable Javscript for better performance
பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி

    By ஜங்ஷன் - intro  |   Published on : 05th August 2016 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பொதுத்தேர்வை எதிர்கொள்வது குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

    புதுப்பாளையம் லயன்ஸ் சங்கம் சார்பில் சிகரம் தொடு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு லயன்ஸ் சங்கத் தலைவர் எழில்மாறன் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் பழநி, பாஜக மாவட்டச் செயலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்கச் செயலர் மதிவாணன் வரவேற்றார்.

    முகாமில் பயிற்சியாளர் பி.ஆர்.தேவராஜன் கலந்துகொண்டு, பள்ளி மாணவிகளுக்கு பதற்றமின்றி பொதுத்தேர்வை எழுதுவது, நினைவுத்திறனை வளர்த்தல், வளரிளம் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகள், மாணவிகள் எல்லா விதத்திலும் மேன்மையடைவது குறித்து பயிற்சி அளித்தார்.

    இதைத் தொடர்ந்து, லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் இந்திரராஜன், வட்டாரத் தலைவர் சங்கர் ஆகியோர் மாணவிகளின் எதிர்கால படிப்பு முறைகள் குறித்து விளக்கிப் பேசினர்.

    இதில், நிர்வாகிகள் பாபு, ஹரிகரன், பழனி மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சிகரம் தொடு கையேடு மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    சூசைநகரில்...: இதேபோல், சேத்துப்பட்டை அடுத்த சூசைநகர் மேல்நிலைப் பள்ளியில் தேவிகாபுரம் லயன்ஸ் சங்கம் சார்பில் சிகரம்தொடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னாள் மாவட்ட ஆளுனர் தனபதி, மாவட்டத் தலைவர்கள் சரவணன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்தனர்.

    தேவிகாபுரம் லயன்ஸ் சங்கத் தலைவர் குப்பன், செயலர் நந்தகோபால், பொருளாளர் ரமேஷ், நிர்வாகிகள் பாலன், அன்புதாஸ், பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai