Enable Javscript for better performance
வியாபாரிகள் சங்கத்தினர் தெருமுனை பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி நகர அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் தெருமுனை பிரசாரம் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் புதன்கிழமை நடைபெற்றது.

    பிராத்தின்போது, இணையதள வர்த்தகத்தால் ஏற்படும் ஆபத்து, சில்லறை வணிகத்தை பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

    பிரசாரத்துக்கு நகரச் செயலர் எஸ்.எஸ்.நூர்முகமது தலைமை வகித்தார். மாநில இணைச் செயலர் எஸ்.அன்சாரி சிறப்புரையாற்றினார்.

    மாவட்டப் பொருளர் நடராஜன், நகரப் பொருளர் பலராமன், மாவட்ட இணைச் செயலர்கள் குபேந்திரன், நித்திஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai