Enable Javscript for better performance
வெடிபொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி அருகே அனுமதியின்றி வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    வந்தவாசியை அடுத்த தெள்ளாறு மாடவீதியைச் சேர்ந்தவர் குமார் (52). இவரது வீட்டில் வெடிபொருள்கள் வைக்கப்பட்டிருப்பதாக வந்த ரகசிய தகவலின்பேரில் உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு தலைமையிலான தெள்ளாறு போலீஸார் புதன்கிழமை அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில், அவரது வீட்டில் 60 ஜெலட்டின் குச்சிகள், 60 டெட்டனேட்டர்கள் ஆகிய வெடிபொருள்கள் அனுமதியின்றி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வெடிபொருள்களை பறிமுதல் செய்த போலீஸார் குமாரை கைது செய்தனர். இதுகுறித்து தெள்ளாறு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai