Enable Javscript for better performance
அடகுக் கடை உரிமையாளர் மகனை கடித்துக் குதறிய வாடிக்கையாளர்- Dinamani

சுடச்சுட

    

    அடகுக் கடை உரிமையாளர் மகனை கடித்துக் குதறிய வாடிக்கையாளர்

    By செங்கம்  |   Published on : 09th August 2016 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கத்தில் அடகுக் கடை உரிமையாளர் மகனை கடித்துக் குதறிய வாடிக்கையாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

    செங்கம் பஜார் வீதியில் அடகு மற்றும் நகைக் கடை நடத்தி வருபவர் மாது. இவரது மகன் சந்துரு (28), இவர் மட்டும் திங்கள்கிழமை கடையில் இருந்துள்ளார்.

    அடகுக் கடையில் சாத்தனூர் அருகேயுள்ள மல்லிகாவரத்தைச் சேர்ந்த மணிவண்ணன் மனைவி இந்திரா தங்க நகையை சில மாதங்களுக்கு முன் அடகு வைத்துள்ளார். அந்த நகையை மீட்பதற்கு அவரது கணவர் மணிவண்ணன் வந்து பணத்தை கட்டுகிறேன் நகையை கொடுங்கள் எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு சந்துரு அடகு வைத்த நபர் இந்திரா வந்தால்தான் நகை தரப்படும் எனக் கூறியுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மணிவண்ணன் சந்துருவின் நெஞ்சியில் மிருகத்தனமாக கடித்தாராம். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.

    இதில் காயமடைந்த சந்துரு செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும், இச்சம்பவம் குறித்து சந்துரு அளித்த புகாரின் பேரில், செங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai