Enable Javscript for better performance
அரசுப் பேருந்து-மினி வேன் உரசல்: 8 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்து-மினி வேன் உரசல்: 8 பேர் காயம்

    By திருவண்ணாமலை  |   Published on : 09th August 2016 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அருகே அரசுப் பேருந்தும், மினிவேனும் உரசிக் கொண்ட விபத்தில் பெண் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.

    திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை கிராமத்தில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலுக்குச் சென்றனர். கோயிலில் வழிபாடு முடிந்து மினி வேனில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அய்யம்பாளையம் அருகே வரும்போது எதிரே வந்த அரசுப் பேருந்தும், வேனும் உரசிக் கொண்டன. இதில், வேனில் பயணம் செய்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலலிதா (48), அஜித்குமார் (13), அரசுப் பேருந்தில் பயணம் செய்த திருக்கோவிலூரைச் சேர்ந்த வீரமணி (19), வேலூர் மாவட்டம், அரக்கோணம் ராஜா (39), சேத்துப்பட்டு சின்னையன் (55), சவரப்பூண்டி பார்த்தசாரதி (24), செங்கம் திருமலை (19), திருவண்ணாமலை சுகுணா (43) உள்பட  8 பேர் பலத்த காயமடைந்தனர்.

    இவர்களை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து  வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai