Enable Javscript for better performance
ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை முயற்சி

    By திருவண்ணாமலை  |   Published on : 09th August 2016 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரிந்து சென்ற மனைவியை மீட்டுத் தரக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    திருவண்ணாமலையை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேலு (40). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு, வின்னரசி, விபின்சா என்ற 2 மகள்கள் உள்ளனர். அண்மையில் மனைவி பெயரில் சிங்காரவேலு சொந்த ஆட்டோ வாங்கினாராம்.

    இதனால் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்தனராம். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவருக்கும், மேரிக்கும் தொடர்பு ஏற்பட்டதாம். இதையறிந்த சிங்காரவேலு, மேரியை கண்டித்தாராம்.

    இதனால் ஆத்திரமடைந்த மேரி, கணவரை விட்டுப் பிரிந்து குமாருடன் சென்றுவிட்டாராம். இதையடுத்து, மனமுடைந்த சிங்காரவேலு, திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் தனது மனைவியை மீட்டுத் தருமாறு மனு அளித்தார்.

    சிறிது நேரத்தில் தான் எடுத்து வந்திருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    இதைக் கவனித்த போலீஸார் சிங்காரவேலுவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai