Enable Javscript for better performance
ஆந்திர சிறையிலுள்ள 32 தமிழர்களை விடுவிக்க வேண்டும்: தமாகா- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திர சிறையிலுள்ள 32 தமிழர்களை விடுவிக்க வேண்டும்: தமாகா

    By ஆரணி  |   Published on : 09th August 2016 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திர சிறையில் உள்ள 32 தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என தமாகா தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம் ஆரணி தனியார் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநில பொதுச் செயலரும், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான ஏ.எஸ்.முனவர்பாஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது குறித்து நிர்வாகிகளிடையே பேசினார்.

    மேலும், கூட்டத்தில் 19-8-2016 அன்று நடைபெறும் மூப்பனார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, ஆந்திரா சிறையிலுள்ள 32 அப்பாவித் தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும், மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், ஆரணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கவும், விவசாயிகளின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கே.ஆர்.தாமோதரன் தலைமை வகித்தார். ஆரணி நகரத் தலைவர் எம்.தினேஷ்பாபு வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் பி.சி.இளந்தரையன் முன்னிலை வகித்தார். பொறுப்பாளர்கள் வி.சி.தினகரன், என்.வி.கோவிந்தன், கே.ஜி.ஆர்.மூர்த்தி, டி.கே.செல்வம், பி.நீலாலோகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai