Enable Javscript for better performance
ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் சாந்தி சேகர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், பரணிதரன், துணைத் தலைவர் பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    விரைவில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்க உள்ள நிலையில் இக்கூட்டம் கடைசிக் கூட்டம் என்பதால் ஒன்றியக்குழுத் தலைவர் சாந்தி சேகர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 5 ஆண்டுகாலமாக அரசின் பல்வேறு திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தனது நன்றி என்றார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமரன், ஆறுமுகம், குமரேசன், அம்மு, திருமலை, மல்லிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai