Enable Javscript for better performance
உயர் மின்னழுத்தம்: வீடுகளில் மின்னணு பொருள்கள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    உயர் மின்னழுத்தம்: வீடுகளில் மின்னணு பொருள்கள் சேதம்

    By ஆரணி  |   Published on : 09th August 2016 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி அடுத்த முக்குறும்பை கிராமத்தில் திங்கள்கிழமை இரவு உயர் மின்னழுத்தம் காரணமாக சுமார் 100 வீடுகளில் இருந்த மின்னணு பொருள்கள் சேதமடைந்தன.

     ஆரணி அடுத்த முக்குறும்பை கிராமத்தில் தனியார் செல்லிடப்பேசி கோபுரம் சரிபார்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பணியின்போது, மின் இணைப்பு கொடுக்கும்போது உயர் மின்னழுத்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள சுமார் 100 வீடுகளில் இயங்கிக் கொண்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் செயலிழந்து சேதமடைந்தன. இதேபோல, செயல்பட்டுக் கொண்டிருந்த மின்விசிறி, மிக்ஸி, குளிர்சாதனப் பெட்டிகளும் பழுதடைந்து நின்றுள்ளன.

    இதனால், மக்கள் பழுதடைந்த பொருள்களை  எடுத்து வந்து சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai