Enable Javscript for better performance
உலக நன்மைக்காக வேடியப்பன் கோயிலில் பெண்கள் வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    உலக நன்மைக்காக வேடியப்பன் கோயிலில் பெண்கள் வழிபாடு

    By திருவண்ணாமலை  |   Published on : 09th August 2016 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக நன்மைக்காக, திருவண்ணாமலை ஸ்ரீவேடியப்பன் கோயிலில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை பொங்கலிட்டு வழிபட்டனர்.

    திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள வேடியப்பன் கோயிலில் ஆண்டுதோறும் உலக நன்மைக்காக, பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி, திங்கள்கிழமை 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு சுவாமிக்கு படைத்து வழிபட்டனர்.

    முன்னதாக, இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராஜ் தலைமையில் கொல்லிமலை சித்தர் பிரேம சாய்பாபா சிறப்பு வழிபாட்டை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை நடைபெற்றன. சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீவேடியப்பனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். விழாவில், கோயில் அங்காவலர் ஆர்.சீனிவாசன், நகராட்சி கவுன்சிலர் ரஜினிகாந்த், முன்னாள் கவுன்சிலர் ஏ.வடிவேல், வழக்குரைஞர் சாந்தகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai