Enable Javscript for better performance
ஐ.டி.ஐ. மாணவர்களிடம் கத்தி முனையில் வழிப்பறி- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி அருகே ஐ.டி.ஐ. மாணவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன்களை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

    வந்தவாசியை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் சையத்இஷாக் (20), முத்துக்குமார்(20).

    இவர்கள் இருவரும் வந்தவாசி-சேத்பட் சாலை, பொன்னூர் மலை அருகில் உள்ள தனியார் ஐ.டி.ஐ-யில் இரண்டாமாண்டு படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஐ.டி.ஐ-க்கு அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஐ.டி.ஐ. தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதற்காக இருவரும் திங்கள்கிழமை காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    பொன்னூர் மலை அருகில் செல்லும்போது இவர்களுக்கு பின்னால் இருசக்கர வாகனம் ஒன்றில் வந்த 3 பேர் முந்திச் சென்று இருவரையும் வழிமறித்தனர். இதில், ஒருவர் தலைக்கவசம் அணிந்தும், மற்ற 2 பேர் கைக்குட்டையால் முகத்தை மூடியும் இருந்தனர்.

    இவர்கள் 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி சையத்இஷாக்கிடமிருந்து ரூ.1500, ஒரு செல்போன், ஒரு ஏடிஎம் கார்டு ஆகியவற்றையும், முத்துக்குமாரிடமிருந்து ரூ.500, ஒரு செல்போன் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிவிட்டனர். 

    இதுகுறித்த புகாரின் பேரில், வந்தவாசி வடக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai