Enable Javscript for better performance
பெண்ணுக்கு கத்திக்குத்து: போலீஸார் விசாரணை - Dinamani

சுடச்சுட

    

    செங்கம் அடுத்த மேல்மண்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோன் மனைவி காந்திமதி (30), ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டின்  முன் நின்று கொண்டிருந்தபோது அப்பகுதி வழியே இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.

    இங்கு யாரைப் பார்க்க வந்துள்ளீர்கள் என காந்திமதி கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்து இப்பகுதி வழியாக புறவழிச் சாலைக்குச் செல்லவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இங்கு வழியில்லை என காந்திமதி கூறியுள்ளார்.

    இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அந்த இளைஞர் கத்தியால் காந்திமதியின் நெற்றியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி விட்டாராம். ரத்தம் வழிந்த நிலையில் காந்திமதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 

    இதுகுறித்த புகாரின் பேரில், செங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, யார் அந்த இளைஞர், எதற்காக காந்திமதியை கத்தியால் குத்திச் சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai