Enable Javscript for better performance
ராமானுஜர் கோயில் கட்ட இடம் கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ராமானுஜர் கோயில் கட்ட இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம், இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் செஞ்சி ராஜா, மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராஜ், மாவட்டச் செயலாளர் ஏ.பிரகாஷ் ஆகியோர் ஆட்சியரிடம் அளித்த மனுவில், ராமானுஜரின் உடல் ஸ்ரீரங்கம் கோயிலில் ஆயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அனைத்து அடியார்களுக்கும் கோயில் உள்ளது.

    எனவே, ராமானுஜருக்கும் கிரிவலப் பாதையில் கோயில் கட்ட வேண்டும். இதற்கான இடத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கித் தர வேண்டும்.

    ராமானுஜருக்கு மரியாதை செய்யும் வகையில் அவர் பெயரில் தங்க நாணயம் வெளியிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சா.பழனி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai