Enable Javscript for better performance
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

    By போளூர்/ ஆரணி  |   Published on : 10th August 2016 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போளூர் நகரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு நகரச் செயலர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான தூசி மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பாளராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 100 சதவீதம் வெற்றிபெற கட்சி நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என்றார்.

    இதில், கலசப்பாக்கம் எல்எல்ஏ பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ ஜெயசுதா, ஸ்ரீராமஜெயம் கல்லூரி நிறுவனத் தலைவர் சி.ஏழுமலை மற்றும் போளூர் பேரூராட்சியைச் சேர்ந்த 18 வார்டுகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    களம்பூரில்....: இதேபோல், ஆரணியை அடுத்த களம்பூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகரத் தலைவர் ஏ.ராமலிங்கம் தலைமை வகித்தார்.

    நகரச் செயலர் கே.பி.பஞ்சாட்சரம் வரவேற்றார். இதில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், மாவட்டச் செயலர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், ஆரணி எம்.பி செஞ்சி வே.ஏழுமலை, கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம், போளூர் ஒன்றியக்குழுத் தலைவர் ஏ.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர், களம்பூரில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் ஜெயலலிதா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  இதில், ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிமுகவில் உறுப்பினர்களாக இணைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai