ஆக.15-ஆம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
By திருவண்ணாமலை | Published on : 10th August 2016 09:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் வரும் 15-ஆம் தேதி நடைபெறாது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் வரும் 15-ஆம் தேதியும் குறைதீர் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், அன்றைய தினம் சுதந்திர தின விழாவையொட்டி அரசு விடுமுறை என்பதால் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.
அடுத்த மக்கள் குறைதீர் கூட்டம் வரும் 22-ஆம் தேதி வழக்கம்போல் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.