Enable Javscript for better performance
\\\"ஆரணி ஜவுளிப் பூங்காவுக்கு நெசவாளர்கள் பங்களிப்புத் தொகை பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "ஆரணி ஜவுளிப் பூங்காவுக்கு நெசவாளர்கள் பங்களிப்புத் தொகை பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கும்'

    By ஆரணி  |   Published on : 10th August 2016 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணியில் பட்டு ஜவுளிப் பூங்கா அமைக்க கைத்தறி நெசவாளர்கள் சார்பில் பங்களிப்பு தொகையை பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கும் என்று வங்கியின் மண்டல மேலாளர் தெரிவித்தார்.

    பஞ்சாப் நேஷனல் வங்கி ஆரணி கிளை சார்பில் இரண்டாவது தேசிய கைத்தறி தினவிழா ஆரணியில் உள்ள தனியார் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

     நிகழ்ச்சியில் வங்கியின் சென்னை மண்டல மேலாளர் வினோத் ஜோஷி கலந்துகொண்டு, 152 கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான கடனுதவியை வழங்கிப் பேசியது:

    ஆரணியில் உற்பத்தியாகும் கைத்தறி பட்டுச் சேலை பாரம்பரியமிக்கது.  இந்தத் தொழிலில் ஈடுபடும் கைத்தறி நெசவாளர்களுக்கு மத்திய அரசு கடன் உதவி வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு வழங்கியதை விட இந்த ஆண்டு அதிகப்படியாக 250 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் 152 பேர் மட்டுமே மனு செய்தனர். மனு செய்த அனைவருக்கும் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

    கடன் உதவித் தொகை ரூ.2 லட்சம் வரை வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

    நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு வினோத் ஜோஷி அளித்த பேட்டி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூலம் நெசவாளர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாகவே வழங்க தயாராக உள்ளோம்.

     ஜவுளிப் பூங்கா அமைக்க நெசவாளர்கள் சார்பாக பங்களிப்பு தொகையினை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்வோம். மேலும், ஜவுளிப் பூங்கா அமையும் இடத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு என்றே தனி வங்கிக் கிளையை தொடங்கவும் தயாராக உள்ளோம் என்றார்.

    நிகழ்ச்சியில் துணை வட்டார மேலாளர் நந்தகுமார், கைத்தறித் துணி நூல் துறை உதவி இயக்குநர் செந்தில்குமார், ஆரணி தாலுகா நெல் அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவர் சி.மோகன்ராஜ் மற்றும் 100க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள், மாவட்டத்தில் உள்ள வங்கிக் கிளை மேலாளர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai