Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு கட்சியினர் பாடுபட வேண்டும்: எ.வ.வேலு எம்எல்ஏ பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு கட்சியினர் பாடுபட வேண்டும்: எ.வ.வேலு எம்எல்ஏ பேச்சு

    By ஆரணி  |   Published on : 10th August 2016 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலில் திமுக 100 சதவீதம் வெற்றிபெற கட்சியினர் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்று சேத்துப்பட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு பேசினார்.

    சேத்துப்பட்டு - செஞ்சி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் சேத்துப்பட்டு கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் நகர திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு பேசுகையில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து ஊராட்சிகளிலும் திமுகவினரை கட்சியினர் வெற்றிபெற வைக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார்.

    கூட்டத்தில், போளூர் தொகுதி எம்எல்ஏ கே.வி.சேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ராஜேந்திரன், நகரச் செயலர் இரா.முருகன், மாவட்டப் பொருளாளர் ந.பாண்டுரங்கன், மாவட்ட துணைச் செயலர் பரமேஸ்வரி ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் என்.கே.பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ்குமார், ஒன்றியச் செயலர்கள் சுந்தரம், எழில்மாறன், பெரணமல்லூர் ஒன்றியச் செயலர் எம்.டி.மனோகரன் உள்பட திமுக அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai