Enable Javscript for better performance
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனத்துக்கு சீல்- Dinamani

சுடச்சுட

    

    சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனத்துக்கு சீல்

    By திருவண்ணாமலை  |   Published on : 10th August 2016 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தரமற்ற குடிநீர் விநியோகம் செய்து வந்ததாகக் கூறி திருவண்ணாமலையில் இயங்கி வந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (மினரல் வாட்டர்) தயாரிப்பு நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.

    திருவண்ணாமலை, வேங்கிக்கால் பகுதியில் தனியார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேன்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) காலை மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாலை 4 மணி முதல் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு ஆனுப்பப்பட்டன.

    திடீரென மாலை 6 மணிக்கு தயாரிப்பு நிறுவனத்தை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    இதுகுறித்து, செய்தியாளர்களிடம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ராஜா கூறியதாவது:

    இந்த நிறுவனத்தில் தரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

     இந்த குடிநீரை பருகும் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் சீல் வைத்துள்ளோம். இதேபோல, மற்ற குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai