ஜடாமுனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
By வந்தவாசி | Published on : 10th August 2016 09:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் உள்ள ஜடாமுனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஜடாமுனீஸ்வரர் ஸகஸ்ரநாம அர்ச்சனை, பரிவார மூர்த்திகள் மூலமந்திர ஹோமம், நூதன விக்கிரங்களுக்கு பிம்ப சுத்தி, பீட ஸ்தாபனம், யந்த்ர ஸ்தாபனம், பிம்ப பிரதிஷ்டை, கோபுர கலச ஸ்தாபனம் உள்ளிட்டவை நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை அதிகாலை தத்வஹோமம், நாடி சந்தானம், ஸபர்ஸாஹுதி, மகா பூர்ணாஹுதி, யாத்ராதான ஸங்கல்பம், யாகசாலையிலிருந்து கும்பம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.
பின்னர், காலை 10.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக தொண்டு மற்றும் மக்கள் சேவை இயக்க நிறுவனர் கோ.ப.செந்தில்குமார், காஞ்சிபுரம் பாம்பன் அறக்கட்டளை நிறுவனர் சஞ்சீவிராஜா சுவாமிகள், சென்னை ஜம்பு மகரிஷி சத்திரிய ஆன்மிக பீட நிறுவனர் அண்ணாமலை சித்தர், கோயில் நிர்வாகி துரை.வீராசாமி, மாம்பட்டு முத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலர் ஆறு.லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.