Enable Javscript for better performance
தென்னிந்திய  கராத்தே போட்டி: திருவண்ணாமலை பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    தென்னிந்திய  கராத்தே போட்டி: திருவண்ணாமலை பள்ளி சிறப்பிடம்

    By திருவண்ணாமலை  |   Published on : 10th August 2016 09:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் திருவண்ணாமலை ஜீவா வேலு பன்னாட்டுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

    வேலூர் மாவட்டம், பொய்கையில் உள்ள தி நாமக்கல் டீச்சர்ஸ் பார்க் பள்ளியில் அண்மையில் தென்னிந்திய அளவிலான பள்ளி மாணவ - மாணவிகளுக்கான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர்.

    இதில், திருவண்ணாமலை ஜீவா வேலு பன்னாட்டுப் பள்ளி சார்பில் கலந்துகொண்ட டி.திவ்யகவி, ம.தானிஷ், டி.ஜாஸ்பர் தேட்ரவாளன், ஆர்.லட்சுமணன், பி.பிரானேஷ், இ.ரதிகாந்தன், டி.தனுஷ்ராஜ் ஆகியோர் தென்னிந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.

    மேலும், கு.மணிகண்ட சுப்பிரமணிய கணபதி, எஸ்.கே.யஷ்வந்த் குமார் ஆகியோர் தென்னிந்திய அளவில் இரண்டாம் இடத்தையும், பி.பாயஸ், கே.அகிலன், வி.மெக்ரோகித், எஸ்.வினோபா, ஜே.ராமசாமி ஆகியோர் தென்னிந்திய அளவில் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ - மாணவிகளை பள்ளி துணைத் தலைவர் எ.வ.கம்பன், பள்ளி முதுநிலை முதல்வர் ஜே.டி.ஜான்சன், கராத்தே பயிற்சியாளர் டி.ராணி மற்றும் ஆசிரிய - ஆசிரியைகள் செவ்வாய்க்கிழமை பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai