Enable Javscript for better performance
பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி கல்லூரிப் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி கல்லூரிப் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    By செய்யாறு  |   Published on : 10th August 2016 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி செய்யாறில் கல்லூரிப் பேராசிரியர்கள் செவ்வாய்க்கிழமை வாயிற் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் கோ.மணி தலைமை வகித்தார். செயலர் ஜி.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் கே.கண்ணன், இணைச் செயலர் சுப்பிரமணியன், மண்டல துணைத்தலைவர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பல்கலைக்கழக கல்விக்குழு உறுப்பினர் மற்றும் சின்டிகேட் உறுப்பினர் தேர்தலுக்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்கின்ற அரசாணையை திரும்பப் பெற வேண்டும்.

    கல்லூரி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் ஆகியோரை பணி மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai