Enable Javscript for better performance
பேருந்து சக்கரத்தில் சிக்கி லாரி ஓட்டுநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    போளூர் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்தில் ஏறியபோது தவறி விழுந்த லாரி ஓட்டுநர் மீது பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    போளூரை அடுத்த புலிவானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சப்பைய கவுண்டர் மகன் சிவக்குமார் (35). லாரி ஓட்டுநர். செவ்வாய்க்கிழமை மாலை சொந்த வேலையாக போளூருக்கு வந்த சிவக்குமார், புலிவானந்தல் கிராமத்துக்குச் செல்ல அரசு நகரப் பேருந்தில் ஏறியபோது தவறி விழுந்தார்.  அப்போது, பேருந்தின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறியதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து போளூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai