Enable Javscript for better performance
பொதுத் தேர்வில் சிறப்பிடம்: பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    பொதுத் தேர்வில் சிறப்பிடம்: பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு

    By செய்யாறு  |   Published on : 10th August 2016 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் அரசுப் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி அளித்த அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

    வெம்பாக்கம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை சுதா தலைமை வகித்தார்.

    நல்லாசியர் இல.முனுசாமி ராணி அறக்கட்டளை நிர்வாகி செந்தில்குமரன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக செய்யாறு விஸ்டம் கல்வி அறக்கட்டளைத் தலைவர் டி.ஜி.மணி கலந்துகொண்டு, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினார்.

    இந்தத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி அளித்ததைப் பாராட்டி அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரொக்க பரிசு, கோப்பையை அவர் வழங்கினார். இதன் நினைவாக அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளிக்கு பீரோ ஒன்றும் வழங்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, வெம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ், வெம்பாக்கம் வட்டாட்சியர் க.பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai