போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
By திருவண்ணாமலை | Published on : 10th August 2016 09:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலையில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச மாநில பேரவைச் செயலர் க.சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சில் செயலர் மா.நாகராஜன், சிஐடியு மாவட்டச் செயலர் இரா.பாரி, ஏஐடியுசி மாவட்டச் செயலர் எம்.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொமுசவின் டாஸ்மாக் பிரிவு மாவட்டத் தலைவர் ஆர்.ஆறுமுகம், அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம், செயலர் கே.ஆறுமுகம், ஏஐடியுசி மாவட்ட கெளரவத் தலைவர் வி.முத்தையன், மாவட்ட துணைத் தலைவர் கு.ஜோதி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசினர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது. முறைசாரா தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த சட்டத்தை இயற்ற வேண்டும். மோட்டார் தொழிலை பாதிக்கும் சாலைப் போக்குவரத்து சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.