Enable Javscript for better performance
மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுப்பதற்கான விழிப்புணர்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுப்பதற்கான விழிப்புணர்வுக் கூட்டம்

    By செய்யாறு  |   Published on : 10th August 2016 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் மனித கழிவுகளை மனிதனே கையால் அள்ளுவதை தடை செய்வது மற்றும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கான விழிப்புணர்வு, ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    நகராட்சியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் ஆர்.பாவைரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

    ஆணையாளர் செல்வபாலாஜி, பொறியாளர் தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தின்போது, மனித கழிவுகளை மனிதனே கையால் அள்ளும் தொழில் செய்வதை தடை செய்வது மற்றும் இதில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கான மறுவாழ்வு சட்டம் 2013 குறித்து தன்னார்வலர்களுக்கு எடுத்துக் கூறி, அதற்கான ஒலி ஒளி படக்காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில், செய்யாறு லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பி.நடராஜன், தீனதயாளன், செல்வதுரை, புகழேந்தி, ரோட்டரி சங்க நிர்வாகி கன்னிக்குமார், மளிகை கடை வியாபாரிகள் சங்கப் பிரதிநிதி ஜோதிமணி, சினிமா திரையரங்க சங்க நிர்வாகி சங்கர், இனிப்பு கடை சங்க பிரதிநிதி இ.வெங்கடேசன், டீ கடை உரிமையாளர் சங்கம் ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் பாலசுப்பிரமணியன், ஆய்வாளர் கே.மதனராசன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai