Enable Javscript for better performance
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயராணிரவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழு கடைசிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார்.

    இதில், ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயராணிரவி பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளீர்கள். ஆகையால் மன உளைச்சலுடன் நான் இந்தக் கூட்டத்தை நிறைவு செய்கிறேன்.

    ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருந்தால் எந்த பிரச்னையும் வராது. எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி என்றார். இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, திருமால், குப்பன், ரவி, தாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai