Enable Javscript for better performance
ரேஷன் கடை பதிவேடுகளை கிராம சபையில் தணிக்கை செய்ய நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ரேஷன் கடை பதிவேடுகளை கிராம சபையில் தணிக்கை செய்ய நடவடிக்கை

    By திருவண்ணாமலை  |   Published on : 10th August 2016 09:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், நியாயவிலைக் கடை பதிவேடுகளை சமூக தணிக்கைக்கு உட்படுத்த ஊராட்சித் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சா.பழனி கேட்டுக் கொண்டுள்ளார்.

    பொது விநியோகத் திட்ட செயல்பாடு, நியாய விலை கடைகளின் செயல்பாடு ஆகியவற்றில் தூய்மையான நடைமுறையைக் கொண்டு வரும் வகையில் அனைத்து நியாயவிலைக் கடைகளின் பதிவேடுகளையும் சமூக தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தக் கூட்டங்களில் அந்தந்த பகுதி நியாயவிலைக் கடைகளின் அ பதிவேடு, வழங்கல் பதிவேடு, சிட்டா பதிவேடு, இருப்பு பதிவேடு, ஆய்வு பதிவேடு, மண்ணெண்ணெய் விநியோக பட்டியல், ரசீது புத்தகங்கள் ஆகியவை பொதுமக்கள் முன் வைக்கப்பட வேண்டும்.

    இந்த பதிவேடுகளில் உள்ள பதிவுகளும், தங்களது குடும்ப அட்டையில் உள்ள பதிவுகளும் சரியாக உள்ளதா என்று பொதுமக்கள் ஒப்பிட வேண்டும்.

    இந்த சமூக தணிக்கைக்கான ஏற்பாடுகளை அந்தந்த ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சா.பழனி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai