Enable Javscript for better performance
18 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் ஆணை- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் ஆசிரியர்கள் 18 பேருக்கு பணியிட மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டன.

    தமிழக ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆரம்ப, நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை நடைபெற்றது.

    அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வும், மாவட்டத்துக்குள் உள்ள பள்ளிகளில் மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வும் நடைபெற்றது.

    மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் ப.சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் 8 தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றனர்.

    கலந்தாய்வின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பதவிகளுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் மாவட்டத்துக்குள் மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நடைபெற்றது.

    இந்த கலந்தாய்வில் 3 பட்டதாரி ஆசிரியர்கள், 7 இடைநிலை ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்றனர். மாறுதல் பெற்றவர்களுக்கான ஆணைகளை மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் ப.சுப்பிரமணி வழங்கினார்.

    இதில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக கண்காணிப்பாளர் பி.கிருஷ்ணன், கணக்காளர் டி.வெங்கடேசன் மற்றும் ஆசிரிய - ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai