Enable Javscript for better performance
43 இந்தியன் வங்கிக் கிளைகளில் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்கள்- Dinamani

சுடச்சுட

    

    43 இந்தியன் வங்கிக் கிளைகளில் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்கள்

    By திருவண்ணாமலை  |   Published on : 10th August 2016 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியின் 43 கிளைகளில் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

    திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இந்தியன் வங்கியின் 43 கிளைகள் உள்ளன. இந்த கிளைகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் ஆதார் எண் மற்றும் செல்லிடப்பேசி எண்ணை, வங்கிக் கணக்குடன் இணைக்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

    இதற்காக 43 கிளைகளிலும் சிறப்பு பிரிவுகள் (கவுன்டர்கள்) திறக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்கள் பகுதி இந்தியன் வங்கிக் கிளைகளுக்குச் சென்று தங்களது ஆதார் எண் மற்றும் செல்லிடப்பேசி எண்களை வங்கிக் கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம். இதுதவிர, தங்கள் பகுதியில் உள்ள வங்கி வணிக தொடர்பாளரை அணுகியும் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதால் மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களை வாடிக்கையாளர்கள் எளிதில் பெற முடியும் என்று இந்தியன் வங்கியின் திருவண்ணாமலை மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது.

    சிறுதொழில் கடன் வழங்கும் முகாம்: இதேபோல, இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகம் சார்பில் 43 கிளைகளிலும் சிறு, குறு மற்றும் நடு தொழில் கடன் வழங்கும் முகாம் மற்றும் கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.

     திருவண்ணாமலை முதன்மை கிளை, டெம்பிள் வியூ கிளை, போளூர் கிளைகளில் நடைபெற்ற கடன் வழங்கும் முகாமில் கலந்துகொண்ட வாடிக்கையாளர்களுக்கு கடன்களுக்கான இசைவு ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai