Enable Javscript for better performance
இஞ்சிமேடு பெருமாள் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு யாகம்- Dinamani

சுடச்சுட

    

    இஞ்சிமேடு பெருமாள் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு யாகம்

    By போளூர்  |   Published on : 11th August 2016 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேத்துப்பட்டை அடுத்த இஞ்சிமேடு வரதராஜப் பெருமாள் கோயிலில் சுவாதி நட்சத்திர தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

    திருமணமாகாதோருக்கு திருமணம் நடைபெற வேண்டியும், குழந்தை இல்லா தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெற வேண்டியும், தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டியும் என எண்ணற்ற நலன் வேண்டி ஸ்ரீஸ்ரீரங்க சடகோப கைங்கர்ய சபா சார்பில் இந்த யாகம் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள பெருந்தேவி தாயார், சக்கரத்தாழ்வார், ராமர், ஆண்டாள், லட்சுமி நரசிம்மர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்காரம் நடைபெற்றன.

    பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீஸ்ரீரங்க சடகோப கைங்கர்ய சபா பட்டாச்சாரியார் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் யாகம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai