Enable Javscript for better performance
செய்யாறில் விவசாயிகள் நூதனப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெயில், மழை பாதிப்பில் இருந்து நெல் மூட்டைகளை பாதுகாக்க வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    செய்யாறு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற இந்த நூதனப் போராட்டத்துக்கு சங்கத்தைச் சேர்ந்த வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தார்.  இந்தப் போராட்டத்தின்போது, ஒப்பாரி வைத்தும், தரையில் படுத்து உருண்டும் விவசாயிகள் கோஷமிட்டனர்.

    அப்போது, செய்யாறு ஒழுங்குமுறை கூடத்துக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகளை வெயில், மழை பாதிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும், புறவழிச்சாலையில் இருந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வருவதற்கு தனிப்பாதை அமைக்க வேண்டும், விவசாயிகளின் நெல் மூட்டைகளை கிராமங்களில் உள்ள கூட்டுறவு சேமிப்புக் கிடங்கில் இறக்கி வைக்க அனுமதிக்க வேண்டும், தரக்கட்டுப்பாட்டு அலுவலரை உடனே நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தில் செய்யாறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 50 பேர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai