Enable Javscript for better performance
செல்லிடப்பேசியில் பேசியபோது மாடியில் இருந்து விழுந்த மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    செல்லிடப்பேசியில் பேசியபோது மாடியில் இருந்து விழுந்த மாணவர் சாவு

    By திருவண்ணாமலை  |   Published on : 11th August 2016 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கலசப்பாக்கம் அருகே செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி விழுந்த பிளஸ் 2 மாணவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    கலசப்பாக்கத்தை அடுத்த கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் வசந்த்குமார் (17). இவர், ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். வசந்த்குமார் கடந்த 2-ஆம் தேதி வீட்டு மாடியில் இருந்த சுற்றுச்சுவர் மீது அமர்ந்தபடியே தனது நண்பரிடம் செல்லிடப்பேசியில் பேசியுள்ளார்.

    அப்போது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தததில், அவர் பலத்த காயமடைந்தார். பின்னர், வந்தகுமார் மீட்கப்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், அங்கு திங்கள்கிழமை இரவு வசந்த்குமார் இறந்தார். இதுகுறித்து, கடலாடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai